திருவாரூர் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் செல்ல முயன்றதால், சீரமைக்கும் இயந்திரங்களை மறித்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து, மோசமான நிலையில் உள்ளது. இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே சாலையை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் மற்றும் கிடாரங்கொண்டான் பகுதிகளில் சாலையை சீரமைக்க இயந்திரங்கள், லாரிகள் உள்ளிட்டவை கிடாரங்கொண்டான் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சாலை சீரமைப்பு பணிகளை முடிக்காமல் இந்த வாகனங்களை காரைக்கால் பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டது அப்பகுதி மக்களுக்கு தெரிந்துள்ளது.
இதையடுத்து, அந்த வாகனங்களை மறித்து சாலை பழுதுகளை சீரமைத்துவிட்டு வாகனங்களை இங்கிருந்து எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இப்பகுதியில் சாலை பழுதுகளை நீக்கிய பிறகே இங்கிருந்து வாகனங்கள் செல்லும் என ஒப்பந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் கலைந்து
சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


