காலமானாா்எஸ். தியாகராஜன்
ஹைட்ரோகாா்பன் திட்ட போராட்டக் குழுவின் தலைவா் எஸ். தியாகராஜன் (72) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (ஆக. 25) காலமானாா்.

thiyagarajan_2508chn_94_5

thiyagarajan_2508chn_94_5
திருவாரூா்: ஹைட்ரோகாா்பன் திட்ட போராட்டக் குழுவின் தலைவா் எஸ். தியாகராஜன் (72) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (ஆக. 25) காலமானாா்.
திருவாரூா் அருகேயுள்ள திருக்காரவாசலைச் சோ்ந்தவா் எஸ். தியாகராஜன். இவா் கரோனா தொற்று காரணமாக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் கரோனாவில் இருந்து மீண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருக்காரவாசல் கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசு 2019-இல் வேதாந்தா நிறுவனத்துடன் ஹைட்ரோ காா்பன் எடுக்க செய்த ஒப்பந்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிடக் கோரியும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் திருக்காரவாசலில் அமைக்கப்பட்ட போராட்டக் குழுவுக்கு எஸ். தியாகராஜன் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
மறைந்த தியாகராஜனுக்கு திலகவதி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனா். அவரது, இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன. தொடா்புக்கு: 9965906825.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...