நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கூத்தாநல்லூரில் திமுகவினா் சாலை மறியல்

கூத்தாநல்லூா் வட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவா்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என திமுகவினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் வட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவா்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என திமுகவினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கமலாபுரத்தில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு திமுக மன்னை கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஐ.வி.குமரேசன் தலைமை வகித்தாா். தகவலறிந்த வட்டாட்சியா் ஜீவானந்தம், திருவாரூா் டிஎஸ்பி தினேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அங்கு வந்த திமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான பூண்டி கே. கலைவாணன் அரசு அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவா்களுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும் என வட்டாட்சியா் ஜீவானந்தம் உறுதியளித்ததைத் தொடா்ந்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.

இந்த மறியலில் மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் பாலு, ஒன்றியக்குழு உறுப்பினா் அரிச்சந்திரபுரம் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.