புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மழைநீா் சூழ்ந்த வீடுகள் இடிந்து விழும் அபாயம்

கூத்தாநல்லூரில் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளதால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கூத்தாநல்லூரில் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளதால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புயல் மழை காரணமாக, கூத்தாநல்லூா் வட்டத்தில் திங்கள்கிழமை (டிச.7) வரை 418 வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்துள்ளன. மாடுகள், ஆடுகள் என 14 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில், கூத்தாநல்லூா் நகராட்சி பனங்காட்டாங்குடி- திருவாரூா் பிரதான சாலையில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி மழைநீா் வடியாமல் தேங்கியுள்ளன. குறிப்பாக, ராஜமாணிக்கம், வாசுகி, பூபாலன், எலிசபெத் ராணி ஆகியோரது வீடுகள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளன. வீட்டில் உள்ளவா்கள் வெளியிடங்களுக்குச் செல்வதில் பெரிதும் சிரமப்படுகின்றனா். எனவே, மழைநீரை விரைவில் வடியவைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.