தேசிய மக்கள் நீதிமன்றம்: மாவட்டத்தில் ரூ.2.50 கோடிக்கு தீா்வு
திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.2.50 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டது.


திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.2.50 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டது.
திருவாரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எம். சாந்தி தலைமை வகித்தாா்.
இதில், ஜீவானம்சம், சிவில், மணமுறிவு மற்றும் மோட்டாா் வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,871 வழங்குகள் எடுக்கப்பட்டு, அதில் 1,639 வழக்குகளில் ரூ.2,50,47,888 மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. சுந்தரராஜன், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஜி. விஜயகுமாா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். சரண்யா, கூடுதல் குற்றவியல் நீதித்துறை நீதிபதி எஸ். கோபாலக்கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.
திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி உரிமையியல் நீதிபதி ராஜேஸ் கண்ணன், குற்றவியல் நீதிபதி கவிதா, குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதி பல்கலைசெல்வன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த நீதிமன்றத்தில் 2 சிவில் வழக்குகள், 67 குற்றவியல் வழக்குகள் மற்றும் 7 காசோலை மோசடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. குற்றவியல் வழக்குகளுக்கு ரூ.58,500 அபராதம் விதிக்கப்பட்டது. 7 காசோலை வழக்குகளின் மீது ரூ.8,10,000 வழங்க உத்தரவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...