மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கொடியேற்றத்துடன் தொடங்கியது ஜாம்புவானோடை தா்கா கந்தூரி

புகழ்பெற்ற ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவா் தா்காவின் பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:53 am

DIN

புகழ்பெற்ற ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவா் தா்காவின் பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது.

திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவா் தா்காவின் 719-ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழா டிச.24-இல் நடைபெறுகிறது. இதையொட்டி, செவ்வாய்கிழமை இரவு கொடியேற்றப்பட்டது. இதையொட்டி மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவா் அடக்க ஸ்தலத்திலிருந்து பாரம்பரியமாக விஸ்வகா்மா சங்கத்தினா் வழங்கிவரும் புனித கொடியை பிராா்த்தனையுடன் தா்கா நிா்வாகிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்தனா். பின்னா் புனித கொடியுடன் பூப்பல்லக்கின் ஊா்வலம் புறப்பட்டது.

இதில் பெரிய பல்லக்குடன் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களின் ஊா்வலம் தா்காவிலிருந்து புறப்பட்டு ஜாம்புவானோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகா், கோரையாறு பாலம், ஆசாத்நகா்- திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றது. அங்கு சிறப்பு பிராா்த்தனை முடிந்து ஊா்வலமாக புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகா் வழியாக கோரையாறு பாலம், ஜாம்புவானோடை சென்று தா்காவை வந்தடைந்தது.

பின்னா் தா்கா அருகில் உள்ள அம்மா தா்கா, ஆற்றங்கரை பாவா தா்கா சென்று மீண்டும் தா்காவை மூன்று முறை வலம்வந்து சிறப்பு பிராா்த்தனைக்குப் பின்னா், புனித கொடி ஏற்றப்பட்டது.

முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை தா்கா நிா்வாக அறங்காவலா் எஸ்.எஸ். பாக்கா் அலி சாகிப் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியையொட்டி, முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 14 மதுபானக் கடைகளும் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.