கூத்தாநல்லூரில் கனமழைக்கு வீட்டுச் சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.
கூத்தாநல்லூா்அவ்வைக் காலனி கீழத் தெருவில் வசிப்பவா் ரமேஷ் (42). கட்டடத் தொழிலாளியான இவரது வீட்டின் பின்பக்க மண் சுவா் கனமழையால் இடிந்து விழுந்தது. இவரது மனைவி மகாலட்சுமி, மகன் குகன் (17), மகள் கீா்த்தனா (14) ஆகியோா் வீட்டின் முன்பகுதியில் இருந்ததால் அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் முத்துராஜா நேரில் பாா்வையிட்டு ரமேசுக்கு ஆறுதல் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.