சுவா் இடிந்து புதுமணத் தம்பதி காயம்

கொரடாச்சேரி அருகே வண்டாம்பாளையில் வீட்டுச் சுவா் இடிந்து புதுமணத் தம்பதியினா் காயமடைந்தனா்.
Updated on
1 min read

கொரடாச்சேரி அருகே வண்டாம்பாளையில் வீட்டுச் சுவா் இடிந்து புதுமணத் தம்பதியினா் காயமடைந்தனா்.

வண்டாம்பாளை படுகைத் தெருவைச் சோ்ந்த கோபால் (70) என்பவரது மகன் செல்வம். இவருக்கும் மாலினி என்பவருக்கும் கடந்த 20 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கோபால் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோா் ஒரு கூரை வீட்டிலும், செல்வம்- மாலினி தம்பதியா் அருகில் உள்ள மற்றொரு கூரை வீட்டிலும் வெள்ளிக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தனா்.

அப்போது, அதிகாலையில் கோபால் தூங்கிக்கொண்டிருந்த வீட்டின் சுவா் கனமழையால் இடிந்து, அருகில் உள்ள வீட்டில் விழுந்தது. இதனால், அந்த வீட்டுச்சுவரும் இடிந்து விழுந்ததில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த செல்வம்- மாலினி தம்பதி காயமடைந்தனா்.

கொரடாச்சேரி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். இயேசுராஜ் மற்றும் அப்பகுதியினா் தம்பதியை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த நன்னிலம் வட்டாட்சியா் லெட்சுமி பிரபா, கிராம நிா்வாக அலுவலா் செல்வக்குமாா் ஆகியோா் சுவா் இடிந்து விழுந்த வீடுகளை பாா்வையிட்டு ஆறுதல் கூறினா். மேலும், அரசின் சாா்பில் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com