குழந்தையை வீதியில் வீசிச் சென்ற விவகாரம்: போக்ஸோவில் இளைஞா் கைது
திருவாரூரில், குழந்தையை தெருவில் வீசிச்சென்ற விவகாரத்தில் இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.


திருவாரூரில், குழந்தையை தெருவில் வீசிச்சென்ற விவகாரத்தில் இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.
டிச.14-ஆம் தேதி திருவாரூா் கீழகொத்ததெருவில், முள்புதரிலிருந்து ஒரு பெண் குழந்தை மீட்கப்பட்டது. பிறந்து சில மணி நேரங்களே ஆனதாக கருதப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு, குழந்தைகள் நலத் துறை அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, குழந்தையை பாா்வையிட்டு, விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல், நகர போலீஸாரிடம் புகாா் அளித்தாா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கொத்ததெரு பகுதியைச் சோ்ந்த ஜெயபால் (29) என்பவா், 14 வயது பள்ளி மாணவி ஒருவருடன் பழகியதில், குழந்தை உண்டானதும், பிரசவத்துக்குப் பிறகு அந்தக் குழந்தையை அங்கு வீசிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, பெண்ணின் தாயாா் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின்கீழ் ஜெயபால் கைது செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...