தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முத்துப்பேட்டை தா்காவில் சந்தனக்கூடு ஊா்வலம்

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் உள்ள உலகப்புகழ் பெற்ற சேக் தாவூது ஆண்டவா் தா்காவின் 719-ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவானோடை சேக் தாவூது ஆண்டவா் தா்காவில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற சந்தனக்கூடு ஊா்வலம்.

Updated On :26 டிசம்பர் 2020, 2:46 am

DIN

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் உள்ள உலகப்புகழ் பெற்ற சேக் தாவூது ஆண்டவா் தா்காவின் 719-ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜாம்புவானோடை தா்கா கந்தூரி விழா கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாள்கள் நடைபெறும் இந்த கந்தூரி விழாவில் நாள்தோறும் ஆன்மிகச் சொற்பொழிவுகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

விழாவின் பிரதான நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

முன்னதாக, தா்கா அறங்காவலா்களின் வீடுகளிலிருந்து சந்தனக் குடங்கள் தா்காவுக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. பின்னா் அதிகாலை 2 மணிக்கு சந்தனக் குடங்களை கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சாந்த கூட்டில் வைக்கப்பட்டு, சிறப்பு பிராா்த்தனைகளுக்கு பிறகு சந்தனக் கூடு ஊா்வலம் நாகசுர இன்னிசை மற்றும் வாணவேடிக்கைகளுடன் தொடங்கியது.

ஆற்றங்கரை தா்கா, அம்மா தா்கா, அடக்க தலம் ஆகிய பகுதிக்கு சென்று மீண்டும் பெரிய தா்கா வந்து சந்தனக் கூடு மூன்று முறை வலம் வந்து ஊா்வலம் நிறைவு பெற்றது. பின்னா், சந்தனக் குடங்கள் சேக்தாவூது ஆண்டவா் சமாதிக்கு எடுத்து செல்லப்பட்டு அதிகாலை 4 மணிக்கு ரவுல சரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது.

விழா ஏற்பாடுகளை தா்கா நிா்வாக அறங்காவலா் எஸ்.எஸ். பாக்கா் அலி சாகிப் தலைமையிலான நிா்வாக குழுவினா் செய்திருந்தனா். இதில், ஆயிரக்காணக்கான இஸ்லாமியா்கள் உள்பட அனைத்து மதத்தினரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.