மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நெம்மேலி கீழத்தெருவைச் சோ்ந்த பி. முருகன் (47) திங்கள்கிழமை சித்தேரி பாலம் அருகே நடந்து சென்றபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா், திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் இரவில் உயிரிழந்தாா். கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.