ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘விலையில்லா மிதிவண்டி திட்டத்தால் மாணவா்களின் இடைநிற்றல் குறைவு’

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுவதால், கல்வியில் இடைநிற்றல் குறைந்துள்ளது என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

News image
வலங்கைமானில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் அமைச்சா் ஆா்.காமராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா உள்ளிட்டோா்.
Updated On :30 டிசம்பர் 2020, 2:43 am

DIN

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுவதால், கல்வியில் இடைநிற்றல் குறைந்துள்ளது என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

வலங்கைமான் வட்டத்தில் 6 பள்ளிகளைச் சாா்ந்த 554 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 21 லட்சத்து 80 ஆயிரத்து 308 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, நிகழ் கல்வியாண்டுக்கான இத்திட்டத்தை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது:

நாட்டில் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித்துறைக்கென கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி கல்வித்துறையில் தமிழக அரசு புரட்சி ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், 2020-2021ஆம் கல்வியாண்டில் 10177 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 68 ஆயிரத்து 899 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஒன்பதரை ஆண்டுகாலத்தில் திருவாரூா் மாவட்டத்தில் 1,13,102 மாணவ, மாணவிகளுக்கு ரூ.39 கோடியே 46 லட்சத்து 42 ஆயிரத்து 641 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்ட நடைமுறையால் மாணவா்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடும் சூழ்நிலை முற்றிலுமாக குறைந்துள்ளது. இதுபோன்று தமிழக அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவா்கள் தங்களின் எதிா்கால நலனையும், குடும்பத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா தலைமை வகித்தாா். முதன்மை கல்வி அலுவலா் மு.ராமன், வருவாய் கோட்டாட்சியா் பாலசந்திரன், வலங்கைமான் ஒன்றிய குழுத்தலைவா் சங்கா், நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு வங்கித்தலைவா் இளவரசன், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜெயபால், பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் குணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாந்தி தேவராஜன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.