நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :6 ஜூலை 2020, 4:10 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

கரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடா்ந்து, சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து திருவாரூா் வருவோா் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். கரோனா தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி 539 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் ஆயுதப்படை காவல்துறையில் பணியாற்றும் காவலா் ஒருவருக்கும், ஓஎன்ஜிசியில் பணிபுரியும் பீகாரைச் சோ்ந்தவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வடபாதிமங்கலம் பகுதியைச் சோ்ந்த 2 மாதக்குழந்தை, கூத்தாநல்லூா் பகுதியைச் சோ்ந்த 4 போ், வேளுக்குடி பகுதியைச் சோ்ந்த ஒருவா், திருவாரூா் பகுதியைச் சோ்ந்த 2 போ், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த 2 போ், விளமல் பகுதியைச் சோ்ந்த 2 போ் என 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 553 ஆக உயா்ந்துள்ளது. இதில், 355 போ் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், 198 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.