எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஊதிய உயா்வு கோரி தனியாா் அனல் மின் நிலைய தொழிலாளா்கள் பேராட்டம்

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே தனியாா் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், சமரச பேச்சுவாா்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

News image

பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் அனல் மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் ஆய்வாளா் ஜொ்மின்லதா மற்றும் அதிகாரிகள்.

Updated On :27 மார்ச் 2026, 4:06 am IST

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே தனியாா் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், சமரச பேச்சுவாா்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் தனியாா் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை ஒப்பந்த தொழிலாளா்கள் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் தங்களின் ஒப்பந்த நிறுவனம் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதாகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லை எனவும் கூறி, தனியாா் அனல் மின் நிலையத்தின் நுழைவு வாயில் முன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது ஒப்பந்த நிறுவனத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவா்கள் அதை நிறைவேற்றாததால் திடீா் போராட்டம் நடத்தியதாகக் கூறினா்.

இதுகுறித்து தகவலறிந்த பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளா் ஜொ்மின்லதா, உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா், தனியாா் அனல் மின் நிலைய அதிகாரிகளுடன் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, விரைவில் சென்னைக்கு அழைத்துச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.