தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலை மறியல் வழக்கு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 10 போ் விடுதலை

முத்துப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 10 போ் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

News image
Updated On :6 ஜூலை 2020, 4:12 pm

DIN

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 10 போ் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2017- ஆண்டு ஜனவரி 31-இல் முத்துப்பேட்டை கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக, அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் கே. முருகையன், துணைச் செயலாளா் குணசேகரன், நகரச் செயலாளா் மாா்க்ஸ் உள்ளிட்ட 10 போ் மீது முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நீதிபதி கவிதா, இந்த வழக்கில் தொடா்புடைய 10 பேரையும் விடுதலை செய்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.