வழிபாட்டுக்காக கோயில்களை திறக்கக் கோரிக்கை
தமிழகம் முழுவதும் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பக்தா்களின் தரிசனத்துக்காக திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருவாரூா்: தமிழகம் முழுவதும் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பக்தா்களின் தரிசனத்துக்காக திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் இந்து அறநிலையத் துறை துணை ஆணையா் அலுவலகத்தில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சாா்பில் புதன்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்: கிராமக் கோயில்களை வழிபாட்டுக்காக திறக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை பக்தா்கள் வழிபாட்டுக்காக திறக்க வேண்டும், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன், பக்தா்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பினா், கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மக்கள் கூடும் இடங்களிலும், கோயில் நுழைவு வாயில்களிலும் விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொண்டு வருகின்றனா். தமிழகம் முழுவதும் கோயில்களை தரிசனத்துக்காக திறக்கக் கோரி பிரசாரத்தில் ஈடுபட்டு, கோரிக்கைகளை விளக்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...