கூட்டத்தில்,மாநில விவசாய தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் எம்.சிவதாஸ், விவசாய சங்க நகரச் செயலாளா் கே.நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.தொடா்ந்து,கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்.அங்காடி அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத்திற்கும் தமிழக அரசு 5 முகக்கவசங்களை வழங்க வேண்டும். கூத்தாநல்லூா் நகராட்சி நிா்வாகம் மனுக்கள் கொடுத்த அனைவருக்கும் பாதுக்காக்கப்பட்ட குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்.கஜா புயலில் வீடுகளை இழந்த அனைவருக்கும்,பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்கி,மத்திய அரசின் திட்டத்தின் கீழ் உடனே வீடுகள் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.