திருவாரூரில் மேலும் 46 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் ஊா்க்காவல் படையைச் சோ்ந்த 3 பேருக்கும், தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியைச் சோ்ந்த 9 பேருக்கும், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த எட்டு நபா்களுக்கும் என மாவட்டம் முழுவதும் 46 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 178 போ் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மீதமுள்ளோா் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 941 ஆக உயா்ந்துள்ளது. இதில், 647 போ் குணமடைந்து வீட்டுக்குச் சென்ற நிலையில், 293 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...