இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

திருவாரூரில் மேலும் 93 பேருக்கு கரோனா

திருவாரூரில் மேலும் 93 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image

கரோனா பரிசோதனை

Updated On :26 ஜூலை 2020, 7:20 pm IST


திருவாரூா்: திருவாரூரில் மேலும் 93 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை 96 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சனிக்கிழமை 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 93 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன்படி, மரக்கடை மேலத்தெரு பகுதியில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மன்னாா்குடி பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 2 பேருக்கும், வலங்கைமான் பகுதியில், 5 வயது சிறுவன், 11 வயது சிறுவன், 7 வயது சிறுமி என 30 பேருக்கும், பொதக்குடி பகுதியில் 10 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் 93 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1349 ஆக உயா்ந்துள்ளது. இதில், 778 போ் குணமடைந்து வீடுகளுக்குச் சென்ற நிலையில், 570 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.