இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த புதிய ஆல்பத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் 15 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருக்கிறார். நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்ததுடன் பின்னணி இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.
கமர்சியல் திரைப்படங்களுக்கான பின்னணி இசையை வடிவமைப்பதில் அனிருத்தை அடித்துக்கொள்ளவே முடியாது என்கிற அளவிற்குக் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான பின்னணி இசைகளையும் உருவாக்கி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்திற்கான அறிவிப்பு விடியோ பின்னணி இசை, அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிவிப்பு இசை, டிசி படத்தின் ரிவெஞ்ச் ராகம் ஆகியவை லட்சகணக்கான முறை ரீல்ஸ் விடியோக்களில் பயன்படுத்தப்பட்டு டிரெண்டிங்கில் இடம்பிடித்தன.
தற்போது, அரவிந்த் என்கிற ஆல்பத்தை அனிருத் உருவாக்கியுள்ளார். இதன் டீசரை இன்று வெளியிட்டு, “நாளை (ஜூன் 14) மாலை அரவிந்த்தைச் சந்திக்கலாம்” எனக் தெரிவித்துள்ளார். திரைப்படங்கள், இசைக் கச்சேரிகளுக்கு இடையே ஆல்பம்களிலும் அனிருத் கவனம் செலுத்தி வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
The teaser for the new album composed by music director Anirudh has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









