கூத்தாநல்லூரில் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாத பாசன வாய்க்கால்: 864 ஏக்கர் விவசாயம் பாதிப்பு
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாக கண்டு கொள்ளாததால், 864 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படைகிறது.


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாக கண்டு கொள்ளாததால், 864 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படைகிறது.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் க.தவபாண்டியன் கூறியது, கூத்தாநல்லூரின் பிரதான ஆறு வெண்ணாறு. கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 13 ஆவது வார்டில், இந்த வெண்ணாற்றில் தடுப்பணை உள்ளது. இந்தத் தடுப்பணை சித்தார் என்ற வாய்க்காலுக்காக, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அந்த தடுப்பணை பழுதாகி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிப்பாரற்று தூர்ந்து போய் உள்ளது. வாய்க்கால் முழுக்க, காட்டாமணிச் செடிகளும், புல்லுகளும், செடி, கொடிகளுமாக மண்டி மரமாகவே வளர்த்து காடு போல காட்சியளிக்கிறது. இப்பாசன வாய்க்காலில் வெண்ணாற்றிலிருந்து வரக்கூடிய தண்ணீர் வருவதற்கு வாய்ப்பே இல்லாமல் உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் கவனிப்பாரில்லை.
இப்பாலத்தின் குறுக்கே, கூத்தாநல்லூர், மரக்கடை இச்சாலையில் வடபாதிமங்கலம் - மன்னார்குடி ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கான குறுக்கு வழியாகவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருச்சக்கர வாகனங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். தூர் வாரப்படாததால், வெண்ணாற்றுப் பகுதியில் 50 மீட்டர், பாலத்திலிருந்து மேல் கொண்டாழி பாசன வாய்க்கால் வரை 400 மீட்டர் வரையிலும், வாய்க்கால் கரையின் இரண்டு பக்கங்களிலும் குடிசை வீடுகள் உள்ளன. தொடர்ந்து, இந்த பாசன வாய்க்காலை விட்டு, விட்டு மற்ற இடங்களில் தூர்வாரப்படுகிறது. இந்த பாசன வாய்க்காலை மட்டும் கவனிப்பதில்லை. இந்த பாசன வாய்க்கால் மூலம், பாண்டுக்குடி வாக்கோட்டை, தென் கோவனூர், கூப்பாச்சிக் கோட்டை ,கோட்டகச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 864 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளை நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
_.jpeg)
இப்பகுதியில், பெரும்பாலும், ஆழ்குழாய் மோட்டார் பொருத்தியிருக்கவில்லை. முழுவதும் ஆற்றுப் பாசனத்தையே நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது. இனியும் இந்த பாசன வாய்க்காலை தூர் வாராமல் இருந்தால், இப்பகுதியில் உள்ள 864 ஏக்கர் விளை நிலம் விவசாயம் செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்படும். இப்பகுதியில் பெரும் விவசாயிகள் இல்லை. சாதாரண, நடுத்தர குறு விவசாயிகள் உள்ளனர். மேலும், இப்பகுதி மக்கள் வெள்ளம், மழைக் காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். தாங்களாகவே முன் வந்தும் செய்யக் கூடிய அளவிற்கு வசதி படைத்தவர்களும் இல்லை. ஏழை, எளிய, சாதாரண கூலித் தொழிலாளர்கள்தான். இதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு, பாசனத் தலைப்பு பகுதியில் தூர்வாரிட வேண்டும்.
பாலத்தை புதிதாக அமைத்துக் கொடுத்து, இப்பகுதி விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தில் பாதுக்காப்பு கொடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில நிர்வாகியும், சி.பி.ஐ. மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினருமான பெ.முருகேசு கூறியது, கூத்தாநல்லூர் நகராட்சி 13 ஆவது வார்டில் உள்ள இந்த பாசன வாய்க்காலின் பாலத்தில்,தடுப்புச் சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் தடுமாறி விழுந்து படுகாயம் அடையும் பரிதாப நிலை தினமும் ஏற்படுகிறது. இளைஞர் பெருமன்றம் சார்பில், தடுப்புச் சுவர் இல்லாததால், மூங்கில் கொண்டு கீற்றை வைத்து அடைத்து வைத்திருந்தோம்.
_.jpeg)
வெண்ணாற்றிலிருந்து வரக்கூடிய இந்த பாசன வாய்க்கால், கொத்தங்குடி, தென் கோவனூர், மஞ்சனவாடி உள்ளிட்ட 3 பஞ்சாயத்து வழியாகச் சென்று, அரிச்சந்திராவில் கலக்கிறது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று, இந்த பாசன வாய்க்காலைப் பார்வையிட்டு, துரித காலத்தில் தூர்வாரி, பாலத்தை அமைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...