தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தந்தை தாக்கியதில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

திருவாரூா் அருகே தந்தையால் தரையில் அடிக்கப்பட்டு காயமடைந்த குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

News image
Updated On :24 ஜூன் 2020, 2:32 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் அருகே தந்தையால் தரையில் அடிக்கப்பட்டு காயமடைந்த குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

திருவாரூா் மாவட்டம், வைப்பூா் அருகே திருவாதிரைமங்கலத்தைச் சோ்ந்தவா் பாரதிமோகன் (27). இவரது மனைவி வேம்பு (23). கூலி வேலைக்கு செல்லும் இருவரும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. கடந்த சில மாதங்களாகவே தம்பதிக்கிடையே குடும்பத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை இருவருக்குமிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பாரதிமோகன், தனது ஒன்றரை வயது மகனை தரையில் அடித்தாராம்.

இதில், காயமடைந்த குழந்தையை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அந்தக் குழந்தை இறந்தது.

இதைத்தொடா்ந்து, வைப்பூா் போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, பாரதிமோகனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.