தூத்துக்குடி அருகே பாலியல் சீண்டலால் தற்கொலைக்கு முயன்ற சிறுமி
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சார்ந்த சரவணன், வேல்சாமி, குகன் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சேர்ந்து


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சார்ந்த சரவணன், வேல்சாமி, குகன் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சேர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், சிறுமியின் வீட்டில் ஆள்இல்லாத சமயத்தில் அங்கு மதுபோதையில் வந்த சரவணனும் அவனுடைய கூட்டாளிகளும் பாலியலுக்கு உடன்படுமாறும், இல்லையென்றால் குடும்பத்துடன் தீயிட்டு கொளுத்தி விடுவதாகவும் சிறுமியை மிரட்டி சென்றுள்ளனர்.
இதை வீட்டில் யாரிடமும் கூறாமல் மனவேதனையில் இருந்துவந்த சிறுமி, தன்மானத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக தனக்குத்தானே தீவைத்து தற்கொலை முயற்சி செய்தார்.
அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிறுமியின் தாய் மற்றும் உறவினர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சிறுமியை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து அவளை தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றசம்பவத்தில் தொடர்புடையவர்கள் இங்கிருந்து வெளியூருக்கு லாரியில் தப்பிச்சென்று விட்டதாக தகவல் வருகிறது.
எனவே, தலைமறைவானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியும், அவருடைய குடும்பத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிசெய்ய வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...