கூத்தாநல்லூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் 20 முகக்கவசம் வழங்கப்படும்: ஆணையர் லதா
கூத்தாநல்லூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு, ரூ.200 அபராதத்துடன், 20 முகக்கவசம் வழங்கப்படும் என ஆணையர் லதா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு, ரூ.200 அபராதத்துடன், 20 முகக்கவசம் வழங்கப்படும் என ஆணையர் லதா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொன்டிருக்கும் கரோனா தொற்று நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இரவு, பகல் பார்க்காமல் மக்களைப் பாதுகாக்க அரும்பாடுபட்டு வருகிறார்கள். கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த வெளியில் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி அல்லது சோப்பையோ பயன்படுத்திக் கைகளைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஆனால், பொதுமக்கள் அறிவுரைகளை மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்கள். கூத்தாநல்லூரில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் பல்வேறு கடைகளிலும், சாலைகளில் வருபவர்களும், இருச்சக்கர வாகனங்களில் வருபவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் முகக்கவசங்கள் அணிவதில்லை. தொடக்கத்தில் நகராட்சி நிர்வாகம் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர். தற்போது அபராதமும் விதிக்கப்படுவதில்லை. முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை.
இதனால், பொதுமக்களுக்கு கரோனாவின் மீதுள்ள அச்சம் குறைந்து விட்டன.மேலும், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் முகக்கவசங்கள் அணியாமல் வெளியில் உலா வந்து கொண்டு இருக்கின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் லதா வெள்ளிக்கிழமை கூறியது. பொதுமக்கள் கரோனாவின் உச்சத்தையும், அதன் மீதுள்ள அச்சத்தையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். எங்களுக்காகச் சொல்லவில்லை. அனைவரின் பாதுக்காபிற்காகவும் தான் சொல்லப்படுகிறது.
முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். அப்போதே, அபராதம் விதிக்கப்படும் ரூ.200 க்கு,20 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...