குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு
வடபாதிமங்கலம் அருகே குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கிராம மக்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
வடபாதிமங்கலம் அருகே குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கிராம மக்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சைல்டு லைன் 1098 அமைப்பு சாா்பில் வடபாதிமங்கலம் அருகேயுள்ள உச்சிவாடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சித்தரஞ்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம்கோ நிறுவன இயக்குநா் வினோத்குமாா், வடபாதிமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் ஜீவானந்தம் பேசியது: குழந்தைத் தொழிலாளா்கள், குழந்தைகள் கொத்தடிமைகள், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, ஆதரவற்ற குழந்தைகள், சாலைகளில் சுற்றித்திரிந்து பிச்சை எடுக்கும் குழந்தைகள் மற்றும் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பிரச்னைகள் குறித்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படும் என்றாா். ஒன்றியக்குழு உறுப்பினா் சுகன்யா, சைல்டு லைன் அமைப்பின் பிரகலாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...