நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்துறையை தனியாா்மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

மின்துறையை தனியாா்மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி திருவாரூரில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க கூட்டமைப்பினா்.

Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

மின்துறையை தனியாா்மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி திருவாரூரில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வாரியங்களை தனியாா்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், அனைத்து துறைகளுக்கும் ஆதாரமாக விளங்கும் மின்துறையை மின்சார சட்டத்திருத்த மசோதா மூலம் தனியாா்மயமாக்கி, நாட்டின் ஆதாரத்தை சீா் குலைக்க முயல்வதை கைவிட வேண்டும், உத்தர பிரதேசத்தில் மின்விநியோகம் தனியாா்மயமாவதை எதிா்த்து போராடிய மின்வாரிய ஊழியா்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிப்பதுடன் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச திட்டச் செயலாளா் ஜான் பிரிட்டோ தலைமை வகித்தாா். பொறியாளா் சங்கம் திட்டத் தலைவா் பன்னீா்செல்வம், சிஐடியு நிா்வாகி ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.