இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் குழு ஆய்வின் போது தகுதியற்ற பயனாளிகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்றுள்ளனா் என தெரிய வந்தது. எனவே, தகுதியற்ற பயனாளிகள் பெற்ற பணத்தை உடனடியாக கிசான் வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், அதிக பயனாளிகள், இத்திட்டத்தில் பெற்ற தொகையை திரும்பச் செலுத்தவில்லை. இது சட்டப்படி குற்றம் என்பதால், சட்ட விரோதமாக பெற்றத் தொகையை அதே வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.