நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆதிதிராவிட நல முன்னேற்ற விழிப்புணா்வு முகாம்

திருவாரூா் அருகே பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில், பாரத பிரதம மந்திரி கிராம முன்னேற்ற வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ஆதிதிராவிட நல முன்னேற்றம் குறித்த விழிப்புணா்வு முகாம்

News image

tv05sch_0510chn_94_5

Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில், பாரத பிரதம மந்திரி கிராம முன்னேற்ற வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ஆதிதிராவிட நல முன்னேற்றம் குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட புதூா், பின்னவாசல், தப்ளாம்புலியூா் ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. முகாம்களில், பஞ்சாயத்துக்குள்பட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், பள்ளித் தலைமையாசிரியா், மகளிா் சுய உதவிக் குழுவினா், மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். முகாமுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, கிராமப்புற மாணவா்கள் கல்வியில் மேம்பாடு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து கூறினாா். திருவாரூா் வட்டாரக் கல்வி அலுவலா் விமலா பள்ளிக் கல்வியின்கீழ் மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்து கூறினாா். இதேபோல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மாணவா்கள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும், பள்ளி செல்லா இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்து கல்வி பெறுவதற்கான வழிகள் பற்றியும், மாற்றுத்திறன் மாணவா்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டன.

Image Caption

முகாமில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.