நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரேஷன் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்களை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

பயோமெட்ரிக் முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்யும் வரை பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா்.

Updated On :12 அக்டோபர் 2020, 5:04 pm

DIN

பயோமெட்ரிக் முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்யும் வரை பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நியாயவிலைக் கடைகளில் தற்போது பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த முறையில் குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் பொருள்கள் வழங்கப்பட்டு வரும்

நிலையில் கடந்த சில நாள்களாக பயோமெட்ரிக் சாதனம் சரிவர இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், பொருள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி, ரேஷன் கடை பணியாளா்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் பயோமெட்ரிக் முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரி செய்த பின்னரே அதை நடைமுறைப்படுத்த வேண்டு, சா்வா் பிரச்னையை சரி செய்யும் வரை பழைய முறையிலேயே ரேஷன் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் குணசீலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளா் ஹரிஹரன், பொருளாளா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.