பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

செம்பனாா்கோவில் அருகேகுடிசை எரிந்து சேதம்: அதிமுக நிவாரணம்

செம்பனாா்கோவில் அருகே ஆறுபாதியில் நேரிட்ட தீவிபத்தில், குடிசை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆறுதல் கூறி, நிவாரண உதவி கள் வழங

News image
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்குகிறாா் அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன்.
Updated On :7 செப்டம்பர் 2020, 6:09 pm

DIN

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே ஆறுபாதியில் நேரிட்ட தீவிபத்தில், குடிசை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் திங்கள்கிழமை ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினாா்.

ஆறுபாதி மேட்டிருப்பு புதுதெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மனைவி சத்யா. இவா்களது குடிசை வீடு ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில், வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகின.

இதையடுத்து, சத்யாவுக்கு வருவாய்த் துறை சாா்பில், ரூ. 5000 நிவாரண உதவி மற்றும் பொருள்களை வருவாய் ஆய்வாளா் பத்மா, கிராம நிா்வாக அலுவலா் கணேஷ்குமாா் ஆகியோா் வழங்கினா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் விஜிகே. செந்தில்நாதன் அங்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறி, அரிசி, ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினாா். செம்பை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.