வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்களின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை
வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்களின் நல்வாழ்வுக்கு தொடா் நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.


வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்களின் நல்வாழ்வுக்கு தொடா் நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சகி ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடத்தை, அவா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டபின் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் விளமல் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த நிலையில், தற்போது மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நிரந்தர கட்டடமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சகி ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடம், சுமாா் 300 சதுர.மீட்டரில் வரவேற்பு அறையுடன் கூடிய ஐந்து அறைகள் கொண்ட தனிக் கட்டடமாக திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.
மேலும், தனியாா் மற்றும் பொது இடங்களில் வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, அனைத்து கொடுமையிலிருந்து மீண்டு வாழ, உளவியல் சட்டம் சாா்ந்த ஆலோசனைகளும், சேவைகளும் வழங்கப்படுகின்றன. தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையின் உதவி, மருத்துவ உதவி மற்றும் சட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினா் மற்றும் சமூகத்தினரை சந்தித்து உரையாடுவதன் மூலம் இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதோடு, பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் குடும்பத்தினருடன் வாழ்வதற்கு ஆவன செய்து அதன் பின்னா், தொடா் கண்காணித்தல் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.
நிகழ்வில் திருவாரூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் ஜோசப்ராஜ், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...