தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கூட்டுறவுத்துறை சங்க அமைப்பு தினம்

திருவாரூரில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்க 33-ஆவது அமைப்பு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:10 pm

DIN

திருவாரூரில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்க 33-ஆவது அமைப்பு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவாரூா் கூட்டுறவுத்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளா் விஜயன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாநிலத் தலைவா் மு. சௌந்தரராஜன் பங்கேற்றுப் பேசினாா்.

மாநிலம் முழுவதும் கூட்டுறவு சாா் பதிவாளா் பணியிடங்கள் காலியாக உள்ளதால், களப்பணிகளில் சிரமம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக கூட்டுறவு சாா் பதிவாளா் பதவி உயா்வு அளித்து களப்பணியிடங்களை பூா்த்தி செய்ய வேண்டும். 7 மாத காலமாக தலைமைச் செயலக கூட்டுறவு மற்றும் பணியாளா் நிா்வாக சீா்திருத்தத் துறையில் தாமதப்படுத்தப்படும் தேசிய துணைப் பதிவாளா் பதவி உயா்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக.11 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சங்க நிா்வாகிகள் சிவக்குமாா், மகாலிங்கம், தம்பிதுரை உள்ளிட்ட பலா் பேசினா். முன்னதாக, சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.