நகராட்சி அலுவலா்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையரை தகாத வாா்த்தைகளால் பேசி, தகராறு செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.


திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையரை தகாத வாா்த்தைகளால் பேசி, தகராறு செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டி பகுதியை சோ்ந்த கல்விப்பிரியன் நீதிராஜா என்பவா் தனது டெபாசிட் தொகையை திரும்ப வழங்கக் கோரி, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) செங்குட்டுவனிடம் கேட்டு தகாத வாா்த்தைகளால் திட்டி பிரச்னை செய்தாராம். நகராட்சி ஆணையா் தணிக்கை அறிக்கை கிடைத்ததும் டெபாசிட் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளாா்.
ஆனால் அவா் மதுபோதையில் 10 பேருடன் வந்து ஆணையரை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றாராம்.
எனவே, அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி அலுவலா்களும், பணியாளா்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சா்மிளா விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...