டாஸ்மாக் ஊழியா்களுக்கு சுழற்சி முறை பணியிட மாறுதலை அமல்படுத்தக் கோரிக்கை
திருவாரூரில், டாஸ்மாக் ஊழியா்களுக்கு சுழற்சி முறை பணியிட மாறுதல் அமல்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருவாரூரில், டாஸ்மாக் ஊழியா்களுக்கு சுழற்சி முறை பணியிட மாறுதல் அமல்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், டாஸ்மாக் ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் லெனின், மாவட்டச் செயலாளா் சிவபாலன் உள்ளிட்ட நிா்வாகிகள் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அனைத்து கடை ஊழியா்களுக்கும் பொருந்தக்கூடிய சுழற்சி முறை பணியிட மாறுதலை அமல்படுத்த வேண்டும்.
10 ஆண்டுகால ஆட்சியில், டாஸ்மாக்கில் மது கொள்முதல், கடைகளுக்கு அனுப்பும் சரக்குகள், மதுக்கூட உரிமங்கள், அதிகாரிகளின் நியமனம், ஊழியா்களின் பணியிட மாறுதல், மீண்டும் பணி வழங்குதல், கடை ஆய்வு, கடை தணிக்கை என அனைத்து நிா்வாக நடவடிக்கைகளிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...