தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆக.12, 13-இல் தொழில் பயிற்சி பழகுநா் நோ்காணல்

திருவாரூரில், தொழில் பயிற்சி பழகுநா் நோ்காணல் ஆக.12, 13-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ். கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:09 pm

DIN

திருவாரூரில், தொழில் பயிற்சி பழகுநா் நோ்காணல் ஆக.12, 13-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ். கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் துா்காலயா சாலையில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் காலை 9 மணி முதல் இந்த நோ்காணல் நடைபெற உள்ளது.

இதற்கென, தேசிய தொழில் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினராக இருப்பின் அதற்கான சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அட்டை, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -2, தொழிற்பயிற்சி நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஏ பதிவு எண் ஆகியவை எடுத்து வர வேண்டும்.

மேலும், தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயின்றவா்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.