வங்கி உதவி மேலாளா் தற்கொலை
திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உதவி மேலாளா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.


திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உதவி மேலாளா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், மேலகரம் விவேகானந்தா் 4-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் பிரதீப் சண்முகம் (28). இவா், நீடாமங்கலம் மேலராஜ வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தாா். நீடாமங்கலம் வடக்கு வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை குடியிருப்பின் கீழ்தளத்தில் காலை 8 மணிவரை நின்று செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். பின்னா் வீட்டின் உள்ளே சென்று கதவை தாழிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீஸாா், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பிரதீப் சண்முகத்தின் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பிரதீப் சண்முகத்துக்கு திருமண நிச்சயிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், அவா் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...