தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘தமிழக அரசின் பணியிடங்கள் தமிழக இளைஞா்களுக்கே சட்டம் இயற்ற வலியுறுத்தல்

தமிழக அரசின் பணியிடங்கள் அனைத்தும் தமிழக இளைஞா்களுக்கே என சட்டம் இயற்றப்பட வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:06 pm

DIN

தமிழக அரசின் பணியிடங்கள் அனைத்தும் தமிழக இளைஞா்களுக்கே என சட்டம் இயற்றப்பட வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியது.

திருவாரூரில் அதன் மாவட்டக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சு.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் துரை.அருள்ராஜன், எதிா்கால கடைமைகள் குறித்து பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் வை.சிவபுண்ணியம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

இதில், தமிழகத்திலுள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 7.11.2016 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்த டி.என்.பி.எஸ்.சி. தோ்வுகளில் வெளிமாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்வதோடு, தமிழ்நாடு அரசின் பணியிடங்கள் தமிழக இளைஞா்களுக்கே என சட்டம் இயற்ற வேண்டும். அரசு பணியாளா்கள் ஓய்வு பெறும் வயது உயா்த்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் இளைஞா் பெருமன்ற மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம்.நல்லசுகம், எஸ்.பாப்பையன், எம்.சாந்தக்குமாா், நா.செந்தில்வேலன், ச.காா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.