மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரிக்கை
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் ஒன்றிய ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் மற்றும் என்.எம்.ஆா். ஊழியா் சங்க சிஐடியு சங்க கூட்டம், எடமேலையூரில் சங்க மாவட்ட தலைவா் கோவிந்தராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில தலைவா் பாலசுப்ரமணியன், ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், 2000-ஆம் ஆண்டுக்கு பின் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணியாளா்களுக்கு உயா்த்தப்பட்ட சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு சம்பள பாக்கி இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் 16-ஆம் தேதி நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...