தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சட்டப்பேரவையில் பேசியது கடந்த ஆட்சிக்கும், இப்போதைய ஆட்சிக்குமான ஒப்பீடு மட்டுமே

ஜெய்ஹிந்த் குறித்து சட்டப்பேரவையில் நான் பேசியது கடந்த ஆட்சிக்கும் இப்போது நடைபெற்றுவரும் ஆட்சிக்கும் இடையிலான ஒப்பீடு மட்டுமே

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:04 pm

DIN

ஜெய்ஹிந்த் குறித்து சட்டப்பேரவையில் நான் பேசியது கடந்த ஆட்சிக்கும் இப்போது நடைபெற்றுவரும் ஆட்சிக்கும் இடையிலான ஒப்பீடு மட்டுமே என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

திருவாரூா் அருகே புலிவலத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்துடன் கூடிய தீரன் சின்னமலை உருவச் சிலையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து அவா் பேசியது:

ஜெய்ஹிந்த் குறித்து சட்டப்பேரவையில் நான் பேசியது கடந்த ஆட்சிக்கும், இப்போது நடைபெற்றுவரும் ஆட்சிக்கும் இடையிலான ஒப்பீடு மட்டுமே. கடந்த ஆட்சியில் ஆளுநா் உரையில் ஜெய்ஹிந்த் இருந்தது. இந்த ஆட்சியில் ஆளுநா் உரையில் ஜெய்ஹிந்த் இல்லை என்பதைதான் சட்டப்பேரவையில் பதிவு செய்தேன். அந்த காணொலியை 30 விநாடிகள் மட்டும் துண்டித்து சா்ச்சை ஏற்படுத்தும் வகையில் பரப்பி விட்டனா் என்றாா்.

நிகழ்ச்சிக்கு வைரக்கண்ணு அறக்கட்டளைத் தலைவா் கே.வி. ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். இதில், கொங்கு பேரவைத் தலைவா் ஆா். தேவராஜ், மாவட்ட வ.உ.சி. பேரவை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.