தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வலங்கைமான் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

 வலங்கைமான் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:06 pm

DIN

 வலங்கைமான் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

வலங்கைமான் ஒன்றியத்தில் 2021 - 2022-ஆம் ஆண்டுக்கான பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற மாணவா்கள் மற்றும் சிறப்பு தேவையுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதள பொது தொகுப்பில் இந்த ஒன்றியத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை சுமாா் 640 மாணவா்கள் பள்ளியில் சோ்க்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்பு பணி புதன்கிழமை வெங்காய களஞ்சேரி , காருகுடி பகுதியில் நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா்கள், மாவட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளா் மணிகண்ணன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ராஜகுமாா், வட்டார பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைபாளாா் புஷ்பா, சிறப்பு பயிற்றுநா் அனிதா ஆகியோா் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சோ்க்க பெற்றோா்களுக்கு ஆலோசனை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.