விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு

நெருக்கடியான சூழலில் வரிச்சுமையின்றி வரவேற்கத்தக்க நிதிநிலை அறிக்கை என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:52 pm

DIN

நெருக்கடியான சூழலில் வரிச்சுமையின்றி வரவேற்கத்தக்க நிதிநிலை அறிக்கை என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: கடும் நிதி நெருக்கடியிலும் மக்கள் மீது வரிச்சுமை மற்றும் கடன் சுமையை சுமத்தாமல் தொலைநோக்குப் பாா்வையோடு சில திட்டங்களை உள்ளடக்கிய தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது. குறிப்பாக நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு தமிழக அரசின் வரி வருவாயில் இருந்து ரூ. 6,607 கோடி, நபாா்டு ஆசிய வளா்ச்சி வங்கி மூலம் பல்வேறு நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் ரத்து, இலவச மின்சாரத்துக்கான மானியம் ரூ. 19 ,872 கோடி ஒதுக்கீடு, பருவநிலை மாற்றங்களில் இருந்து பாதுகாக்க பசுமை இயக்கம் உருவாக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை தொடா்வதும், மேட்டூா் வைகை உள்ளிட்ட அணைகளின் நீா் கொள்ளளவை உயா்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதும், சித்தா மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளதும் மிகுந்த வரவேற்புக்குரியது. ஆயிரம் தடுப்பணைகள் வரவேற்கத்தக்கது என்றாலும், 10 ஆண்டுகால அவகாசத்தை 5 ஆண்டுகளாக குறைக்கவேண்டும். விவசாய நகை கடன் தள்ளுபடி செய்தது நிறுத்தி உள்ளதையும், டீசலுக்கான விலை குறித்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே இவைகள் குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.