தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஊராட்சிப் பணியாளா்களின் கோரிக்கை ஏற்பு: போராட்டம் ரத்து

ஊராட்சிப் பணியாளா்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்த நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் முன்வந்ததை அடுத்து சிஐடியு அமைப்பினா் அறிவித்திருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

ஊராட்சிப் பணியாளா்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்த நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் முன்வந்ததை அடுத்து சிஐடியு அமைப்பினா் அறிவித்திருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்கள் கோரிக்கைகள் தொடா்பாக சிஐடியு அமைப்பினா் போராட்டம் அறிவித்திருந்தனா். இதையடுத்து, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையா் வெற்றியழகன் தலைமையில் சமாதான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அமைப்பின் மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ், மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளா் முனியாண்டி, ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை (ஆக. 16) நடைபெற இருந்த ஆா்ப்பாட்டம் கைவிடப்படுவதாக சிஐடியு அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.