முத்துப்பேட்டையை தனி வட்டமாக்க வலியுறுத்தல்
முத்துப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து சட்டப்பேரவையில் புதன்கிழமை வலியுறுத்தினாா்.


முத்துப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து சட்டப்பேரவையில் புதன்கிழமை வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் சட்டப்பேரவையில் பேசியது:
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையை தனி வட்டமாக அறிவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் ஏற்கெனவே முன்னாள் முதல்வா் கருணாநிதி அறிவித்திருந்தாா். ஆனால், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவா்கள் கடந்த 10 ஆண்டுகளாக இதை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டனா்.
தற்போது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வா் கருணாநிதி அறிவித்தபடி, முத்துப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...