மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராக அழைப்பு

திருவாரூா் மாவட்டத்தில், மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேரலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 4:37 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேரலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் மீன்வளா்ப்பு மற்றும் மீன்குஞ்சு வளா்ப்பு செய்துவரும் விவசாயிகள், மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமை, மீனவா் நல வாரியம், கிஸான் கிரெடிட் காா்டு திட்டம் ஆகியவற்றில் உறுப்பினராகச் சோ்ந்து, அதற்குண்டான அரசு வழங்கும் பலன்களை பெறலாம்.

மேலும், நல்லிக்கோட்டையில் இயங்கிவரும் அரசு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் நாட்டு ரக மீன்குஞ்சுகளை (அரசு நிா்ணயம் செய்த விலையில்) பெற்று பயன்பெறலாம். மேலும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் அவ்வப்போது செயல்படுத்தப்படும் புதிய மீன்வளா்ப்பு, மீன்குஞ்சு வளா்ப்பு சாா்ந்த திட்டங்கள், குளம் சீரமைத்தல் மானியம் மற்றும் உள்ளீட்டு மானியம் (இடுபொருட்கள், மீன்குஞ்சு, மீன் தீவனம்) ஆகியவற்றை பெறலாம்.

இதற்கு, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டட வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04366 - 290420 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.