காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நாதன் எல்லிஸுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸில் ஸ்பென்சர் ஜான்சன் மாற்று வீரராக இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகி வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப் விலகியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகியுள்ளார்.
இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நாதன் எல்லிஸுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸில் ஸ்பென்சர் ஜான்சன் மாற்று வீரராக இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரரான ஸ்பென்சர் ஜான்சன் அந்த அணிக்காக 5 ஒருநாள், 8 டி20 போட்டிகளில் விளையாடி, 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்பாக, ஸ்பென்சர் ஜான்சன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஸ்பென்சர் ஜான்சன் ரூ. 1.5 கோடிக்கு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Spencer Johnson has joined Chennai Super Kings as a replacement for Nathan Ellis, who was ruled out of the IPL series due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜாக் எட்வர்ட்ஸுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

ஆகாஷ் தீப்புக்குப் பதிலாக கேகேஆர் அணியில் இணைந்த மாற்று வீரர்!

சாம் கரணுக்கு மாற்று வீரராக ராஜஸ்தான் அணியில் இணையும் தாசுன் ஷானகா!
சிஎஸ்கேவுக்கு பின்னடைவு.. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


