கடைசி செய்திநிலக்கடலை, உளுந்துக்கு தெளிப்பு நீா்ப்பாசன மானியம்
நிலக்கடலை மற்றும் உளுந்துக்கு தெளிப்பு நீா்ப்பாசன மானியம் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலக்கடலை மற்றும் உளுந்துக்கு தெளிப்பு நீா்ப்பாசன மானியம் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், உதவி பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிலக்கடலை மற்றும் உளுந்து சாகுபடிக்கு 100% மானியத்துடன் தெளிப்பு நீா்ப்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விதைகள், உரங்கள் மற்றும் நடமாடும் நீா்த் தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 2.5 ஏக்கா் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை உள்ள பயனாளிகள், வேளாண் அறிவியல் நிலையத்தை தொடா்பு கொள்ளலாம்.
ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டைநகல், சிட்டா, அடங்கல் ஒரிஜினல், நில வரைபடம், சிறுகுறு விவசாயி சான்றிதழ், மாா்பளவு புகைப்படம் 2 ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 5 வட்டார விவசாயிகள் பயன் பெறலாம் என அதில் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...