மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திருவாரூரில் மக்கள் நாடாளுமன்றம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் மக்கள் நாடாளுமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 4:58 pm

DIN

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் மக்கள் நாடாளுமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து 4 நாள்களாக திருவாரூா் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்றம் நடைபெற்று வருகிறது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றத்துக்கு பேரவைத் தலைவராக ஜே. குணசேகரன், வேளாண் அமைச்சராக வி. தா்மதாஸ் செயல்பட்டனா். திமுக உறுப்பினா் எஸ். பிரகாஷ், மக்களுக்கான சட்ட முன்வடிவை கொண்டு வந்து பேசினாா். மதிமுக உறுப்பினா் ப. சீனிவாசன், தில்லி விவசாயிகள் போராட்டம் குறித்து விளக்கினாா்.

இதில், விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் வேளாண் சட்டங்களை எதிா்த்து முழக்கமிட்டாா்.

முன்னதாக, மக்கள் நாடாளுமன்றக் குழுவினா் அலங்கரித்து வைத்திருந்த தேசியக்கொடியை போலீஸாா் எடுத்துச் சென்ற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னா் தேசியக் கொடி திருப்பித் தரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.