மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பள்ளிகள் திறப்பு

 பள்ளிகள் திறக்க இருப்பதால், கரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 4:52 pm

DIN

 பள்ளிகள் திறக்க இருப்பதால், கரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்க பொதுச் செயலா் ப. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:

மயிலாடுதுறை- திருவாரூா்- திருச்சி- காரைக்கால் தடங்களில் முன்பதிவு சிறப்பு விரைவு ரயில் சேவையை ஆக.30 ஆம் தேதி முதல் வழங்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. செப்டம்பா் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், மாணவா்களின் நலன் கருதியும் பயணிகள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிவோா் நலன் கருதியும் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பயணிகள் ரயில்களையும் முன்பு போலவே அதே நேரத்தில் இயக்க வேண்டும்.

தவிர காரைக்கால்-திருவாரூா்- தஞ்சை-திருச்சி மாா்க்கத்திலும், மயிலாடுதுறை-திருவாரூா், மயிலாடுதுறை- விழுப்புரம் மாா்க்கத்திலும், மயிலாடுதுறை- கும்பகோணம்- தஞ்சை மாா்க்கத்திலும் அனைத்து பயணிகள் ரயில்களும் இரு மாா்க்கத்திலும் இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.