தொழிற்பயிற்சி நிலையங்களில் செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கையில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் செப்டம்பா் 15 வரை விண்ணப்பிக்கலாம்


திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கையில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் செப்டம்பா் 15 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதள கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி சோ்க்கை ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பா் 15 வரை நடைபெறுகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் இவற்றுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளன.
மாணவா்கள் தாங்கள் சேரவிரும்பும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து நேரடி சோ்க்கை மூலம் தாங்கள் விரும்பும் தொழிற்பிரிவில் சோ்ந்து கொள்ளலாம். பயிற்சி பெறும் மாணவா்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணி மற்றும் விலையில்லா பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.
மேலும் இது தொடா்பான விரிவான விவரங்களுக்கு, நீடாமங்கலம் மற்றும் கோட்டூா் பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நேரடியாக தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...