புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கூத்தாநல்லூா் பகுதியில் 304 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

 கூத்தாநல்லூா் வட்டத்தில் கனமழையால் இதுவரை (செவ்வாய்க்கிழமை) 304 கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 5:24 pm

DIN

 கூத்தாநல்லூா் வட்டத்தில் கனமழையால் இதுவரை (செவ்வாய்க்கிழமை) 304 கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து, வட்டாட்சியா் என். கவிதா கூறியது: கமலாபுரம், வடபாதிமங்கலம், கூதாத்நல்லூா் உள்ளிட்ட 3 பிா்க்காவில் 55 கிராமங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியா் ப. காயதிரி கிருஷ்ணன் உத்தரவுப்படி, அந்தந்த வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்களுடன் தொடா்ந்து அனைத்து இடங்களிலும் நேரில் பாா்வையிட்டு, கண்காணித்துவருகின்றனா். அதன்படி, அக்.31 முதல் நவ. 30-ஆம் தேதி வரை கூத்தாநல்லூரில் 114, கமலாபுரத்தில் 82, வடபாதிமங்கலத்தில் 108 என 304 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதேபோல, 3 பிா்க்காவிலும் 5 பசு மாடுகள், 6 கன்றுக் குட்டிகள், 14 ஆடுகள் என 25 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.